Welcome to House Of Narmadha!
We bring you the perfect blend of tradition and modern luxury. From our kitchen to your lifestyle, we are here to make your days healthier, tastier andd brighter!
Our Specialities:
- Homemade Thokku Varieties : Made with pure love and authentic traditional recepies. No preservatives , just pure home-cooked goodness !
- Nutritious Health Mix : 100% natural and healthy multigrain mix to fuel your family’s daily energy.
- Lab grown Diamonds & Jewellery : Stunning , eco-friendly and certified lab-grown diamond jewellery designed to make you shine on every occasion.
At House Of Narmadha,we celebrate health , taste and timeless elegance . Thank You for letting us be a part of your beautiful journey !
அம்மாக்களின் கைமணத்தில் House of Narmadha
வணக்கம்! நான் நர்மதா சுரேஷ். திருச்சி என் சொந்த ஊராக இருந்தாலும், இப்போது சென்னையில் வசித்து வருகிறேன்.
பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்குச் சென்ற பிறகு வீட்டில் இருந்த நேரத்தில், எனக்குக் கைவந்த கலையான சமையலை ஏன் ஒரு தொழிலாக மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு முக்கியக் காரணம் என் மகளின் ஊக்கமும், என் சமையலைச் சாப்பிட்டுப் பாராட்டிய பலரின் அன்புமே ஆகும்!
கோவில்களுக்குப் பிரசாதம் செய்து கொடுப்பது, உடல்நலம் குன்றிய அக்கம் பக்கத்தினருக்கு அன்போடு சமைத்து வழங்குவது என சமையல் எப்போதும் எனக்குப் பிறருக்குச் சேவை செய்யும் ஒரு வழியாகவே இருந்துள்ளது. “நாம சமைக்கும் சாப்பாட்டை நாலு பேர் வயிறார, திருப்தியா சாப்பிடணும், அது அவங்க உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரணும்” என்பதுதான் என் வாழ்வின் மிக முக்கிய நோக்கம்.
இன்றைய அவசர உலகில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் ஐடி (IT) துறையில் வேலை பார்ப்பவர்கள் என பலருக்கும் ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடு கிடைப்பது சவாலாக உள்ளது. அவர்களின் சிரமத்தைக் குறைக்கவே ‘House of Narmadha’ உருவானது.
எங்களின் சிறப்புகள்: எங்களிடம் சாதம் மட்டும் வடித்தால் போதும்; சட்டென்று பிசைந்து சாப்பிடக்கூடிய சுவையான வத்தக் குழம்பு, மணமணக்கும் பூண்டு குழம்பு போன்ற குழம்பு வகைகளும், விதவிதமான தொக்கு வகைகளும் பாரம்பரிய முறைப்படி சுத்தமாகத் தயாரிக்கப்படுகின்றன.
இதுமட்டுமன்றி, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கும், அனைவருக்கும் உடலுக்கு மிகுந்த வலு சேர்க்கும் பாரம்பரியக் கருப்பு உளுந்து லட்டு மற்றும் சுவையான ரவா லட்டு போன்ற பலகாரங்களையும் மிகுந்த அன்போடு, வீட்டு முறையில் செய்து தருகிறேன்.
அம்மாவின் கைமணத்தில், எவ்வித இரசாயனமும் (Chemicals) இல்லாத, ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாட்டை உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்ப்பதே ‘House of Narmadha’-வின் லட்சியம்!